Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓட்டுக்கு பணமா..? எச்சரித்த “ரஜினி மக்கள் மன்றம்”..!!

பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என மாவட்ட செயலாளருக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் கட்சி தொடங்க உள்ள நிலையில் அதற்கான முதல்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நிறுத்திவைக்கப்பட்டிருந்த பூத் கமிட்டி பணிகளை ரஜினிகாந்த் அறிவிப்பின் பெயரில் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் மன்ற நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகளுடன் ரஜினி தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார். மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் ரஜினி அரசியல் கட்சி பதிவாகியுள்ள நிலையில் அவருக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.

இந்நிலையில் மற்ற நிர்வாகிகள் டிசம்பர் 25 பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க ரஜினி மக்கள் மன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்வாகிகளை நியமிக்கும்போது பணம் பெறக்கூடாது. ஒருவேளை பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று ரஜினி மக்கள் மன்றம், மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரஜினி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது மாவட்ட செயலாளர் தனது பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் உள்ளவர்கள் என்னுடன் வர வேண்டாம் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |