Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படியில் நின்று புகைப்பிடித்த வாலிபர்…. கண்டித்த ஓட்டுனர் மீது தாக்குதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குமார் செம்மஞ்சேரியில் இருந்து கிண்டி நோக்கி புறப்பட்ட அரசு பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். இதனையடுத்து வாலிபர் ஒருவர் படிக்கட்டில் பயணம் செய்தபடி சிகரெட் புகைத்துள்ளார். இதனை பார்த்ததும் குமார் அவரை கண்டித்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த அந்த வாலிபர் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த வாலிபர் நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பேருந்தை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அதன்பிறகு தரமணி பாரதி நகர் பேருந்து நிறுத்தத்தில் வைத்து அந்த வாலிபரும் அவரது நண்பரும் இணைந்து குமாரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தரமணி காவல் நிலையத்தில் குமார் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய நபர் வரதராஜ் மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல் துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |