விழுப்புரம் அருகே புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மதுபானம் அருந்திவிட்டு வண்டி ஓட்டுபவர்களிடம் மேட்டரும் தலை கவசம் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் விதித்து கொண்டிருந்த சமயத்தில், அப்பகுதி வழியாக வேன் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், பின்பக்கம் முழுவதும் பெட்டிகளில் மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொள்கையில், அவர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்பதும்,
புதுச்சேரியில் இருந்த மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள், ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள வேன் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு அவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.