லாரியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெண்டயம்பட்டி கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுண்ணாம்பு கற்களை ஏற்றிக்கொண்டு ராஜசேகர் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் கீழப்பழுவூரில் உள்ள சிமெண்ட் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சுண்ணாம்பு கற்களை லாரியில் இருந்து இறக்கிய பிறகு ராஜசேகர் படுத்து தூங்கியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்த ராஜசேகரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜசேகர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.