Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வாழ்வா? சாவா? போராட்டம்… பேருந்தை இயக்கியபடி இறந்த டிரைவர்… திருச்சியில் பரபரப்பு…!!

பேருந்தை இயக்கி கொண்டிருக்கும் போது நெஞ்சு வலியால் டிரைவர் மயங்கி விழுந்ததால் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அண்ணா வாசலுக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து காலை 9 மணி அளவில் புறப்பட்டு சென்றுள்ளது. இந்தப் பேருந்தை பூனைகுட்டிபட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் ஆனந்த் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து அழங்குடி பிரிவு ரோடு அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக டிரைவர் ஆனந்த் கண்டக்டரிடம் கூறியபடி பேருந்து ஸ்டியரிங்கில் மயங்கி விழுந்து விட்டார். இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்பு சுவரை மோதி மறுபக்க சாலையோரம் இருந்த கருவேல மரத்தில் மோதி நின்றுவிட்டது.

அதிலிருந்த பயணிகள் உயிர் பிழைப்பதற்காக பேருந்திலிருந்து அலறியடித்து இறங்கி விட்டனர். அதன் பிறகு அருகில் உள்ளவர்கள் ஆனந்த்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து மணிகண்டம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |