ஜெர்மனியில் ஒரு பேருந்தில் இருவருக்கு இடையே நடந்த மோதலை தடுக்க முயன்ற ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பல்கேரியாவில் இருக்கும் Hof என்ற நகரத்திற்கு, இரு பேருந்துகளில் போலந்து நாட்டை சேர்ந்த பயணிகள் வந்துள்ளனர். அதன் பின்பு இரவு நேரத்தில் பேருந்து நிறுத்தப்பட்டதால், அனைத்து பயணிகளும் ஓய்வெடுத்துள்ளார்கள். அப்போது பயணிகளுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது.
இதில் 43 வயதுடைய ஒரு நபர், ஒரு பயணியை கத்தியால் குத்தியுள்ளார். எனவே ஒரு பேருந்தின் ஓட்டுநர் ஓடிச்சென்று இருவரையும் தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டது. எனவே பிற பயணிகள் அவருக்கு முதலுதவி செய்தனர். எனினும் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதனிடையே கத்தியால் தாக்கிய நபர் தப்பிச்சென்றுவிட்டார். எனினும் காவல்துறையினர் சிறிது நேரத்தில் அந்த நபரை பிடித்துவிட்டார்கள். தற்போது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.