Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“டிரைவர் கொலை வழக்கு” வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

டிரைவர் கொலை வழக்கில் 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கிராஸ் பகுதியில் லாரி டிரைவர் செல்லவேலு வசித்து வந்தார். கடந்த 17-ஆம் தேதி செல்லவேலு கிழக்கு மேற்கரை கால்வாய் கரை பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இவரை யாரோ மர்ம நபர்கள் கொலை செய்து கால்வாய் கரை பகுதியில் வீசிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லவேலுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார். இந்த கொலை நடந்து 3 தினங்களாக குற்றவாளிகள் குறித்து துப்பு துலங்காமல் இருந்தது.

இதனையடுத்து கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை காவல்துறையினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது கொலையில் செல்லவேலுவிடம் கிளீனராக வேலை பார்த்த 17 வயது சிறுவன் ஈடுபட்டது தெரியவந்து. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் “செல்லவேலுவுக்கு அதே பகுதியை சேர்ந்த 40 வயது பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அந்த பெண்ணை செல்லவேலு அடிக்கடி தனியாக சந்தித்து வந்ததாக தெரிகிறது. இதனை அந்த சிறுவன் தெரிந்துகொண்டார். அதன்பின் செல்லவேலுவுக்கு தெரியாமல் சிறுவன் அந்த பெண்ணிடம் பழக தொடங்கினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணும், சிறுவனும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த செல்லவேலு சிறுவனை கண்டித்ததோடு இதுகுறித்து உன் பெற்றோரிடம் சொல்லி விடுவதாக எச்சரித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்லவேலுவை கொலை செய்திருப்பது” காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக காவல்துறையினர் சிறுவனை கைது செய்ததோடு அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். இந்த கொலை வழக்கில் மேலும் சிலரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |