டிரைவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி தெய்வானை நகரில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தகுமார் வேன் ஸ்டாண்டிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இரு சக்கரத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி சென்றுள்ளனர். இதில் ஆனந்தகுமார் பலத்த காயமடைந்துள்ளார்.
இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் ஆனந்த குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அனந்து குமாரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அனந்தகுமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆனந்த குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.