இந்தியாவில் முதன் முதலாக டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முழுக்க முழுக்க தானாக இயங்கும் துறையில் இயக்கபட்டுள்ள, ஓட்டுநர் இல்லாத இந்த ரயில் மூலம் மனித தவறுகள் நீக்கப்படும். மெஜந்தா மார்க்கத்தில் இந்த சேவை துவக்கப்பட்டு பிறகு டெல்லி மெட்ரோவில் பிங்க் மார்க்கத்திலும் 2021 ஆம் ஆண்டு ஓட்டுநர் ரயில் சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நாட்டின் முதல் முறையாக டிரைவர் இல்லாத மெட்ரோ ரயிலை காணொளி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மெட்ரோ ரயில் சேவை 37 கிலோ மீட்டர் மெஜந்தா பாதையில் ஜனக்புரி மேற்கு முதல் தாவரவியல் பூங்கா மெட்ரோ நிலையம் வரை பயணித்தது.