மயங்கி விழுந்து மர்மமான முறையில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் மாரியப்பன் என்ற ஓட்டுநர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் நயினார்குளம் மார்க்கெட் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக மாரியப்பனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாரியப்பனின் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.