டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அடையகருங்குலம் பகுதியில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆனது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சிவகுமார் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து இது குறித்து விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிவகுமாரின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.