Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பனிமூட்டமா இருக்கு…. பகலில் முகப்பு விளக்கு…. பொதுமக்கள் அவதி….!!

பனிமூட்டம் அதிக அளவில் இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே சாலையில் செல்கின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் லேசான பனிமூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நெல்லிக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர் காற்று தொடர்ந்து வீசி வருவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனை அடுத்து திருவந்திபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பணி குறையாமல் இருக்கின்றது. இதனால் சாலை முழுவதும் பனி மூட்டம் சூழ்ந்து இருக்கின்றதினால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே சென்றதை காணமுடிகின்றது. இதனை தொடர்ந்து தண்டவாளத்தில் பனிமூட்டம் சூழ்ந்ததால் ரயில்களும் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே சென்றது. மேலும் பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று என பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Categories

Tech |