Categories
டெக்னாலஜி பல்சுவை

டிரைவிங் லைசன்ஸ் வேண்டுமா…? ஆர்டிஓ ஆபீஸ் போகாமல் ஆன்லைனிலேயே ஈஸியாக வாங்கலாம்…!!!

ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இதில் பார்க்கலாம்.

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன் பழகுநர் உரிமம் (Learner’s License Registration) பெற வேண்டியது அவசியம். பழகுனர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகே ஓட்டுநர் உரிமம் பெற முடியும்.

தேவையான ஆவணங்கள்:

பிறந்த தேதி சான்று

10ஆம் வகுப்பு சான்றிதழ்,

வாக்காளர் அடையாள அட்டை,

மாற்றுச் சான்றிதழ்

முகவரி சான்று

பாஸ்போர்ட்,

குடும்ப அட்டை,

ஆதார் அட்டை,

வாக்காளர் அடையாள அட்டை

சுய அறிவிப்பு படிவம்

புகைப்படம்

விண்ணப்பிக்கும் முறை:

முதலில் www.parivahan.gov.in வலைத்தளத்திற்குச் செல்லுங்கள். இந்த வலைத்தளத்தில் வலது கீழ் மூலையில் “சாரதி”(Sarathi) என்ற லோகோ அருகில் உள்ள “டிரைவிங் லைசென்ஸ் ரிலேட்டட் சர்வீஸ்”(Driving Licence Related Service) கிளிக் செய்யுங்கள். அதில் உங்கள் மாநிலத்தைத் தேர்வு செய்யுங்கள். பின்னர் ஸ்கிரினின் இடது பக்கத்தில் “டிரைவிங் லைசென்ஸ்”(Driving Licence) என்ற ட்ராப் பாக்ஸ் இல் நிறையச் சேவைகள் இருக்கும். அதில் புது கற்றுணர் உரிமம் (New Learner Licence) கிளிக் செய்யவும். அப்போது உங்கள் விண்ணப்பத்திற்குத் தேவையான ஃபார்ம் வரும்.

அதில் (Applicant does not hold Driving/ Learner Licence) இதற்கு முன் உங்களுக்கு ஓட்டுனர் உரிமம் மற்றும் கற்றுணர் உரிமம் இல்லை என்ற ஆப்ஷன் தேர்வு செய்து சப்மிட் ஆப்சனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்கள் தனி நபர் விவரங்களை கற்றுணர் உரிமம் ஃபார்ம் இல் பதிவேற்றம் செய்யுங்கள். இதில் கியர் வாகனத்திற்கு கற்றுணர் உரிமம் அல்லது கியர் இல்லா வாகனத்திற்கான கற்றுணர் உரிமம் என்பதைக் கவனமாக தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்கள் ஸ்கேன் செய்த தனிப்பட்ட மூன்று அடையாள சான்றிதழை பதிவேற்றம் செய்யுங்கள்.

இறுதியாக சப்மிட் கிளிக் செய்து உங்கள் ஃபார்ம் சமர்ப்பியுங்கள். இப்பொழுது உங்களுக்கான ஒப்புகை சான்றிதழ் கிடைக்கும். அதை பிரிண்ட் செய்து கொள்ளுங்கள். இத்துடன் உங்களுக்கான குறுஞ்செய்தி மற்றும் ஈமெயில் இன்பாக்ஸ் இல் உறுதி செய்துகொள்ளுங்கள். இதில் உங்களுக்கான ஒப்புகை சான்றிதழ், ஃபார்ம் 1 ஐ, ஃபார்ம் 1 எ ஆகியவற்றை பிரிண்ட் செய்து. உங்கள் பதிவேற்றத்திற்கான கட்டணத்தைச் செலுத்தி உங்கள் கற்றுணர் உரிமத்தை அருகில் உள்ள ஆர்.டி.ஓ ஆபீஸ் சென்று பெற்றுக்கொள்ளலாம். 30 நாட்களுக்குப் பின் இதே முறையில் உங்களின் ஓட்டுநர் உரிமத்துக்கும் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Categories

Tech |