ரஷ்ய நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் அந்த ஆலை முற்றிலுமாக எரிந்து போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய நாட்டின் தென்மேற்கு பகுதியில் இயங்கிவரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலயத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் அந்த ஆலை முற்றிலுமாக எரிந்து போனது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சுமார் முப்பது நிமிடங்களாக போராடி நெருப்பை அணைத்திருக்கிறார்கள்.
இத்தாக்குதலில் எவரும் காயமடையவில்லை என்று தீயணைப்பு படை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். மூன்று ஆளில்லா விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அந்த ஆலைக்கு மேல் பறந்து கொண்டிருந்த உக்ரைன் நாட்டை சேர்ந்த இரண்டு ட்ரோன்கள் மோதியதால் தீ விபத்து ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது வரை உக்ரைன் அரசு இந்த ட்ரோன் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.