Categories
உலக செய்திகள்

சீன கடலோர வான் பகுதியில் நுழைந்த ஆளில்லா விமானம்…. தைவான் படை சுட்டு வீழ்த்தியது…!!!

தைவான் ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் சீன நாட்டின் தீவினுடைய வான் பகுதிக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறிக்கொண்டிருக்கிறது. எனவே, தைவான் நாட்டிற்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் சென்று வந்ததை கடுமையாக எதிர்த்தது. அதற்காக தைவான் எல்லை பகுதியில் போர் பயிற்சியும் மேற்கொண்டது. இந்நிலையில், சீன நாட்டின் கடலோரத்தில் இருக்கும் ஷியு தீவினுடைய வான் பகுதியில் ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை, தைவான் ராணுவத்தினர் உடனடியாக சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். நேற்று முன்தினம் இதேபோன்று தைவான் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு தீவில் சீனாவின் ஆளில்லா விமானமே பறந்திருக்கிறது. அந்த தீவு தடை செய்யப்பட்ட பகுதியாகும். எனவே, அந்த விமானத்தையும் தைவான் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |