Categories
தேசிய செய்திகள்

எல்லை பாதுகாப்பில் ட்ரோன் கண்காணிப்பு…. இந்திய ராணுவத்தினர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

இந்திய நாட்டின் எல்லைப் பகுதியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அதாவது சமீப  காலமாகவே பாகிஸ்தான் நாட்டிலிருந்து ட்ரோன்களின்‌ ஊடுருவல் அதிக அளவில் இருக்கிறது. இந்த ட்ரோன்கள் மூலம் சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களை கடத்துவதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இந்திய நாட்டின் எல்லைப் பகுதியில் ட்ரோன்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தலாம் என்று ராணுவத்தினர் முடிவு செய்துள்ளனர்.

இதன் காரணமாக ட்ரோன்களை உள்நாட்டில் கொள்முதல் செய்யும் அமைப்பு தொடர்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் ராணுவம் தகவல் கேட்டுள்ளது. இந்நிலையில் உள்நாட்டில் ட்ரோன்ளின்ள் 60% பாகங்கள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், உள்நாட்டு பாகங்களில் கட்டாய பயன்பாடானது 50 சதவீதம் வரை தளர்த்தப்படும் எனவும் ராணுவத்தினர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

இந்த ட்ரோன் கொள்முதல் உற்பத்தி அமைப்பானது திறந்தவெளி ஒப்பந்த புள்ளி முறையில் மேற்கொள்ளப்படும் எனவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் எல்லைப் பகுதியில் குறைந்த உயரத்தில் நுழையும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவது தொடர்பான ஆயுதங்களையும் கண்காணிப்பு ட்ரோன்களில் பொருத்துவது தொடர்பாகவும் தகவல் கேட்கப்பட்டுள்ளது.

Categories

Tech |