ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆரூர் கிராமத்தில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் தயாநிதி அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற்றுள்ளது. அதை காண்பதற்காக பள்ளிகளில் இருந்து சில மாணவர்கள் மதிய வகுப்பை மட்டும் புறக்கணித்துவிட்டு ஜல்லிக்கட்டு திருவிழாவிற்கு வந்துள்ளனர்.
அதன்பின் விழா நடக்கும் பகுதிக்கு அருகில் உள்ள தரை கிணற்றில் மாணவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது தயாநிதி அறியாமல் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபின் தயாநிதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வாழைப்பந்தல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.