கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள வேட்டுவனபுதூர் மொக்கை தோட்டத்தில் மணிமேகலை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மணிமேகலையின் தோட்டத்தில் உள்ள 160 அடி ஆழமுள்ள கிணற்றில் 6 மாதமான ஆட்டுக்குட்டி தவறி விழுந்துள்ளது. இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் எவ்வளவு முயற்சித்தும் ஆட்டுக்குட்டியை மீட்க முடியவில்லை.
எனவே அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டுள்ளனர். அதன் பின் உயிருடன் மீட்கப்பட்ட ஆட்டுக்குட்டி தாயிடம் பத்திரமாக ஒப்படைக்கபட்டுள்ளது.