Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாதுகாப்பா கற்றுக் கொடுத்திருக்கலாம்…. குளத்தில் பறிபோன 3 உயிர்…. திண்டுக்கல்லில் சோகம்….!!

குளத்தில் நீச்சல் பழகும்போது தண்ணிரில் மூழ்கி மூவர் பலியான சம்பவம் திண்டுக்கல் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காவிரி செட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம்-ராதா தம்பதியினர். ராதா தன்னுடைய மகள் பவ்யா மற்றும் அதே பகுதியைச் சார்ந்த தண்டபாணியின் மகள் சரஸ்வதி ஆகியோருடன் நேற்று செங்குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். முவரும் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது சிறுமிகளுக்கு ராதா நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சிறுமிகள் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர்களைக் காப்பாற்றுவதற்காக ராதா முயற்சித்துள்ளார். குளத்தில் ஆழம் அதிகமாக இருந்ததால் ராதாவும் தண்ணிரில் மூழ்க தொடங்கினார். மூவரும் தண்ணீரில் தத்தளித்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் குளத்தில் இறங்கி அவர்களை மீட்க போராடினர். ஆனால் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் போராடி மூவரின் பிணங்களையும் கிராம மக்கள் மீட்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |