Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆடு மேய்க்க சென்ற 2 பெண்களுக்கு…. திடீரென ஏற்பட்ட அதிர்ச்சி… சோகத்தில் உறைந்த கிராமம் …!!

இரண்டு பெண்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நரசிங்க புரத்தை சேர்ந்தவர் மேகவர்ணம். இவருடைய மகள் இமையா. அதே பகுதியை சேர்ந்த பஞ்சாட்சரம் மனைவி கோவிந்தம்மாள்.  சம்பவம் நடந்த அன்று இமையா, கோவிந்தம்மாள் கல் ஆற்றுப்பகுதியில் மதியம் மாடு மேய்த்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது இமையா எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இமையாவை காப்பாற்றுவதற்காக கோவிந்தம்மாள் ஆற்றில் இறங்கிய போது அவரும் நீரில் மூழ்கியுள்ளார்.

இருவரும் தண்ணீரில் தத்தளிப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவர்களை மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால் இருவரையும் மீட்க வெகு நேரமானதால் இருவரும் இறந்து விட்டனர். ஒரே தெருவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |