Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஐயோ யாராவது காப்பாத்துங்க… தனியாக தவித்த சிறுவன்… 24 மணி நேர போராட்டம்… சேலத்தில் பரபரப்பு…!!

கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள நத்தமேடு காலனி பகுதியில் நாகராஜன் வசித்து வருகிறார். இவருக்கு கிருத்திக்ராஜ் மற்றும் நித்திஷ் குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் கிருத்திக்ராஜ் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி தெருபட்டி கிராமத்திற்கு கூலி வேலைக்கு சென்றிருந்த தங்களது தாத்தாவிற்கு உணவு கொடுப்பதற்காக இரண்டு சிறுவர்களும் சென்றுள்ளனர்.

அதன்பின் தாத்தாவுக்கு உணவு கொடுத்து விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது, அங்குள்ள கிணற்றில் தண்ணீர் இருந்ததால் குளிப்பதற்காக கிணற்றுக்கு அருகில் சென்றுள்ளனர். அப்போது கிருத்திக்ராஜ் கால் தவறி கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டான். அங்கிருந்து வெளியே வர முடியாததால் அதிர்ச்சி அடைந்த நிதிஷ்குமார் சத்தம் போட்டுள்ளான். ஆனால் அப்பகுதியில் யாரும் இல்லாத காரணத்தால், உடனடியாக வீட்டிற்குச் சென்று நடந்தவற்றை எல்லாம் கூறியுள்ளான்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உறவினர்கள் பிரித்திவிராஜை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் கிணற்றின் ஆழமானது 120 அடி இருந்ததால் அவர்களால் சிறுவனை மீட்க முடியவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 24 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் சடலத்தை மீட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |