Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி வந்து செல்லும் நபர்கள்…. சிக்கிய பீடா கடை உரிமையாளர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை செய்த குற்றதிற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

கோயம்புத்தூர் மாவட்டத்தில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகமாக இருப்பதாகவும் அதனை ராஜவீதியில் உள்ள ஒரு கடையில்  விற்பனை செய்வதாகவும் தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ஆர்.எஸ். புரம் உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் பூபதி, கார்த்திக், உமா, மாரிமுத்து ஆகியோர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்குள்ள ஒரு கடைக்கு தொடர்ந்து வருகின்ற நபர்கள் போதை பொருள்களை  வாங்கிச் செல்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்தக் கடையின் உரிமையாளரான நேமராம் காவல்துறையினர் பிடித்து விசாரித்தபோது தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் பகுதியில் கஞ்சா சப்ளை செய்யும் முருகன் என்பவரிடம் இருந்து இவற்றை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

அதன்பின் காவல்துறையினர் நேமராம் மூலம் முருகனையும் கோயமுத்தூர் வரவழைத்து மடக்கி பிடித்துவிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |