போதைப்பொருள் வழக்கில் மீண்டும் ஒரு நடிகைக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவில் போதைப் பொருள் புகாரில் தொடர்பு இருப்பதாக பிரபல ஹிந்தி நடிகர்கள் அடுத்தடுத்து குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதில் ஏற்கனவே நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு நடிகைக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. நடிகை சஞ்சனா பங்கேற்ற விருந்து நிகழ்ச்சி இலங்கையில் நடைபெற்றது. இந்த கேளிக்கை விடுதியின் கர்நாடக ஏஜெண்டான சேக் பாசில் என்பவனையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகை அன்ட்ரிதா ராய், சென்ற சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் நடைபெற்று வரும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதாகவும், அந்நிகழ்ச்சிக்கு தன்னை அழைத்த சேக் பாசிலுக்கு நன்றி எனவும் வீடியோ வெளியிட்டிருந்தார். சேக் பாசிலுடன் சேர்ந்து சூதாட்ட விடுதியில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன. இதனடிப்படையில், போதைப்பொருள் விவகாரத்தில் அன்ட்ரிதா ராய்க்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.