சர்வதேச அளவில் 600 க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வு கூடங்களில் கொரோனாவை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரம் அடைந்து வருகிறது..
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கு பரவி ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது. இந்த வைரசால் பல லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் உலக நாடுகளின் பொருளாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது..
இதனால் இந்த கொரோனா வைரசை கூடிய விரைவிலேயே ஒழித்துவிட வேண்டும் என பல்வேறு நாடுகளும் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. அதாவது, பல்வேறு நாடுகளில் 600 க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வு கூடங்களில் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரம் அடைந்து வருகிறது..
இது தொடர்பாக தரவுகளை உலக சுகாதார அமைப்பும், அமெரிக்க தேசிய மருத்துவ நூலகமும் கண்காணித்து வருகின்றன. நாள்தோறும் கொரோனாவுக்கு எதிரான புதிய கண்டுபிடிப்புகள் சிறிதளவு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தாலும், இன்னும் ஆதாரபூர்வமான மருந்து ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை. இந்தியாவும் ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளுக்கு ஒப்புதலளித்துள்ளது.