சவப்பெட்டியில் வைத்து கடத்தப்பட்ட 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாபோலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
பிரேசிலில் Goias பகுதியில் இருக்கும் சோதனை சாவடி ஒன்றில் ராணுவ போலீசார் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் அவ்வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தியுள்ளனர். ஓட்டுநரிடம் விசாரிக்க சென்ற போது 22 வயது இளைஞனான அவர் ஒருவித பதற்றத்துடன் காணப்பட்டதால் சந்தேகமடைந்த போலீசார் காரில் என்ன இருக்கிறது என கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த ஓட்டுநர் சவப்பெட்டி இருப்பதாகவும் அதற்குள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடல் இருப்பதாகவும் கூறியுள்ளார். காவல்துறையினருக்கு சந்தேகம் அதிகரித்ததால் சவப் பெட்டியைத் திறந்த போது பெரும் அதிர்ச்சி கிடைத்தது. காரணம் திறக்கப்பட்ட சவப்பெட்டியில் 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா மறைத்து வைத்து கடத்த முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காரின் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://twitter.com/i/status/1273578707660107779