Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உனது பெற்றோரை கொன்று விடுவேன்” போதை ஊசியால் நடந்த விபரீதம்… கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

போதை ஊசி போடுவதில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்த வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போடிபாளையம் பகுதியில் இருக்கும் வாடகை வீட்டில் ஜீவானந்தம் மற்றும் மணிகண்டன் என்ற இரண்டு நண்பர்கள் வசித்து வந்துள்ளனர். கடந்த 4ஆம் தேதி போதை ஊசி போடுவதில் தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த மணிகண்டன் தனது நண்பரான ஜீவானந்தத்தை வெட்டி கொலை செய்து விட்டார். இதனையடுத்து கொலையாளியான மணிகண்டனை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் நண்பர்கள் இரண்டு பேரும் இணைந்து குனியமுத்தூர் பகுதிக்கு சென்று போதை ஊசியை வாங்கியுள்ளனர். அதன்பின் ஜீவானந்தத்திற்கு மணிகண்டன் போதை ஊசியை செலுத்தி உள்ளார்.

ஆனால் ஜீவானந்தம் தனக்கு போதை ஏற வில்லை என்றும், வேறு ஒரு ஊசியை வாங்கிவா என்றும் மணிகண்டனை வற்புறுத்தியுள்ளார். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று மணிகண்டன் கூறியதற்கு உனது செல்போனை விற்று ஊசி வாங்கி வா என்று ஜீவானந்தம் அவரை கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது போதை ஊசியை வாங்கி தரவில்லை என்றால் உனது பெற்றோரை கொலை செய்து விடுவேன் என்று ஜீவானந்தம் மணிகண்டனை மிரட்டியுள்ளார். இதனால் கோபம் அடைந்த மணிகண்டன் ஜீவானந்தத்தை வெட்டி கொலை செய்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Categories

Tech |