பிரான்ஸ் நாட்டில் போதைப்பொருள் விற்பனை செய்த கும்பலுக்கு 10 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
பிரான்ஸின் தலைநகரான பாரீஸ் மற்றும் சுமார் 93 மாவட்டங்களில் பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். தற்போது அவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்த ஐந்து நபர்கள் கொண்ட குழுவிற்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் ஹீராயின், 2 கிலோ போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
அதன் ஒட்டு மொத்தமதிப்பு இரண்டு லட்சம் யூரோக்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன் பின்பு அந்த கும்பலிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அதில் நால்வர் செனகல் நாட்டினர் என்றும் ஒருவர் பிரான்ஸ் நாட்டவர் என்றும் தெரியவந்திருக்கிறது.
அங்குள்ள பொப்பினி நீதிமன்றத்தில், அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டு 10 வருடங்கள் ஆயுள் தண்டனையும், 10,000 யூரோவிலிருந்து 80,000 யூரோக்கள் வரை அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த குற்றவாளிகளில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபருக்கு ஐந்து வருடங்கள் நாட்டிற்குள் வாழ தடை அறிவிக்கப்பட்டுள்ளது.