Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இளைஞர்களை குறிவைத்து விற்பனை….. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

போதை மாத்திரைகள் விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சல்மா நகரில் வசிக்கும் நிசாமுதீன் என்பதும், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் நிசாமுதீனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் 40 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |