தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் மற்றும் உலக நாயகனுடன் இணைந்து இந்தியன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது அமலாக்கத்துறை போதை பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பெங்களூருவில் 2 போதை பொருள் கடத்தல் காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சினிமா பிரபலங்களுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக கூறியுள்ளனர்.
அந்த தகவலின் படி அமலாக்க துறையினர் பல்வேறு சினிமா பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு நிலையில் தற்போது விசாரணையானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அமலாக்கத் துறையினர் தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் தெலுங்கானா எம்எல்ஏ பைலட் ரோகித் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் கடந்த வருடம் போதை பொருள் கடத்தலில் ரகுல் ப்ரீத் சிங்கின் பெயர் வந்தபோது தனக்கு எதிராக மீடியாக்கள் அவதூறு பரப்புவதாகவும், பொய்யான தகவல் பரப்பும் மீடியாக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.