Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஐயோ! என்ன செய்யுறது… கரெக்டா வந்துட்டாங்களே… அடித்து பிடித்து ஓட்டம்… மொத்தமும் பறிமுதல்….!!

88 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி சென்ற குற்றத்திற்காக போலீசார் வாலிபரை கைது செய்ததோடு, அவர் கடத்தி சென்ற கஞ்சாவையும் பறிமுதல் செய்து விட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கு மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை பகுதியிலிருந்து இரண்டு நபர்கள் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த கார் கமுதக்குடி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பழுதாகி விட்டது. இதனையடுத்து அந்த காரில் பயணித்தவர்கள் காரை நடுரோட்டில் நிறுத்தி பழுது பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த சமயம் நெடுஞ்சாலைத்துறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து அவர்கள் அருகே வாகனத்தை நிறுத்தி போலீசார் அவர்களிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது போலீசாரை கண்டதும் பயத்தில் அங்கிருந்து ஒருவன் தப்பித்து விட்டான். இதனையடுத்து போலீசார் அந்த கார் டிரைவரை கைது செய்து விசாரித்த போது, அவர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் வசித்து வரும் பெரியகருப்பன் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின் போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது, அதில் 88 கிலோ கஞ்சாவை 4 மூட்டைகளில் கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. மேலும் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |