6 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் அயர்லாந்து நாட்டிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு வந்த இரண்டு பார்சல்களை சோதனை செய்துள்ளனர். மேலும் சென்னை மற்றும் நாமக்கல் முகவரிகளுக்கு வந்த 2 பரிசல்களில் சூப் பரிசுப்பெட்டி என எழுதி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்தபோது, சென்னை முகவரிக்கு வந்த பார்சலில் 2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 26 கிராம் போதை பவுடரும், நாமக்கல் முகவரிக்கு வந்த பார்சலில் 4 லட்சம் மதிப்புள்ள நீலநிற போதை மாத்திரைகளும் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அந்த பார்சலில் இருந்த முகவரிகளை பற்றி அதிகாரிகள் விசாரித்த போது அவை போலியானவை என்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு தபால் பார்சல்களில் போதை மாத்திரைகள் இருந்தது சுங்க இலாகா அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்ததால் இதனை கடத்தியவர்கள் யார் என்ற விவரம் குறித்து தீவிர விசாரணை நடத்துகின்றனர். மேலும் 6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர்.