சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்துநகர் காவல் துறையினர் கோவில்பிள்ளை விலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆரோக்கியபுரம் பகுதியில் வசித்து வரும் சேர்மராஜா என்பதும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக சேர்மராஜாவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.