Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அனைத்து இடங்களிலும் சோதனை… சட்ட விரோதமாக விற்பனை… வியாபாரிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எட்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு குன்னூர் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நந்தகுமாரின் தலைமையில் அதிகாரிகள் குன்னூரில் உள்ள அனைத்து கடைகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த சோதனையில் அங்குள்ள கடைகளில் சட்டவிரோதமாக இரண்டு வியாபாரிகள் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததோடு, சட்டவிரோதமாக புகையிலை விற்பனை செய்த இரண்டு வியாபாரிகளுக்கும் உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகள் எட்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அதோடு அப்பகுதியில் முக கவசம் அணியாமல் இருந்த 5 பேருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Categories

Tech |