Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓட்டம்… மடக்கி பிடித்த போலீசார்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் போலீசாரை கண்டதும் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூடப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வெள்ளவேடு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டதும் அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் தான் வைத்திருந்த பையுடன் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் 150 கிராம் கொண்ட கஞ்சாவை சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபர் அதே பகுதியில் வசித்து வரும் பிரசாந்த் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |