Categories
உலக செய்திகள்

“டிரக் கவிழ்ந்து விபத்து”…. 54 பேர் உயிரிழந்த சோகம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

மெக்சிகோவில் டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 54 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமெரிக்காவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த டிரக், மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் மாகாணத்தின் புறநகர் பகுதியில் நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில் ஆபத்தான வளைவில் திரும்பியபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் டிரக் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  54 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் பல பேர் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து அளவுக்கு அதிகமாக ஆட்களை டிரக்கில் ஏற்றி வந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |