முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல்
தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 2
தக்காளி – 2
முருங்கைக்காய் – 2
கத்திரிக்காய் – 2
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய் , முருங்கைக்காய் , உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளற வேண்டும் . பின் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். காய்கள் வெந்ததும், மிளகாய் தூள் தூவி , பிரட்டி இறக்கினால், முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல் ரெடி!!!