முருங்கைக்காய் இறால் தொக்கு செய்யும் முறை
தேவையான பொருட்கள்
முருங்கைக்காய் -இரண்டு
இறால்- அரை கிலோ
வெங்காயம்- 1
தக்காளி -3
கருவேப்பிலை- சிறிதளவு
மிளகு- ஒரு டீஸ்பூன்
சீரகம் -ஒரு டீஸ்பூன்
மிளகாய் பொடி -இரண்டு டீஸ்பூன்
கரம் மசாலா பொடி- அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள்- சிறிதளவு
தேங்காய் எண்ணெய்- இரண்டு டேபிள்ஸ்பூன்
உப்பு– தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய்யை காய வைத்து எண்ணெய் காய்ந்ததும் சீரகம் கருவேப்பிலை மற்றும் மிளகு சேர்க்கவும் இதனுடன் பொடியாக வெங்காயம் சேர்த்து வதக்கவும் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளி நன்கு வதங்கிய எண்ணெய் பிரியும் பக்குவத்தில் இறாலை சேர்த்து கிளறி விடவும் சிறிது நேரம் கழித்து முருங்கைக்காய் சேர்த்து கிளறி கரம் மசாலா சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து தீயில் வேக வைக்கவும் தேவை என்றால் இத்துடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து ருசிக்கலாம்
இப்போது முருங்கைக்காய் இறால் தொக்கு ரெடி