கர்நாடகாவில் அரசு பேருந்து நடத்தினர் ஒருவர் பயணி மார்பில் எட்டி உதைத்து சாலையில் தள்ளிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன
கர்நாடக மாநில கே.எஸ்.ஆர்.டி.சி அரசு பஸ் கண்டக்டர், பயணி ஒருவர் மார்பில் எட்டி உதைத்து வெளியே தள்ளிய சிசிடிவி காட்சி வைரலாகி உள்ளது. கர்நாடக மாநிலம் தென் கர்நாடக மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரமங்களாவில் கே.எஸ்.ஆர்.டி.சி நடத்துனர் பயணி மார்பில் எட்டி உதைத்து, வெளியே தள்ளிய மனிதாபிமானமற்ற சம்பவம் நேற்று நடந்தது.
இந்த சம்பவத்தில் பேருந்து பயனிடம் தவறாக நடந்து கொண்ட பேருந்து கண்டக்டர் சுப்புராஜ் என அடையாளம் காணப்பட்டது. மேலும் அந்த பயணி குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. பேருந்தில் ஏறும் பொழுது நடத்துனர் பயணியை தடுத்து நிறுத்தி உள்ளார்.அப்போது பேருந்தில் இருந்து கீழே இறங்குமாறு கூறி பயணியை கண்டக்டர் கையால் தாக்கியுள்ளார், இறுதியில் பயணியின் மார்பில் காலால் எட்டி உதைத்து சாலையில் தள்ளினார்.
மதுபோதையில் பஸ்ஸில் ஏறிய நபர்… காலால் எட்டி உதைத்த கண்டக்டர்.. பதற வைக்கும் வீடியோ…!! pic.twitter.com/gEjDTJPkiI
— SeithiSolai Tamil (@SeithisolaiNews) September 8, 2022
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பேருந்தில் ஏறும் பயணி எந்த நிலையில் இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க எந்த நடத்துனருக்கும் அதிகாரம் இல்லை. பேருந்து நடத்தினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் கர்நாடக மாநில போக்குவரத்து கழகம் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் பயணிக்கு ஆகும் மருத்துவ செலவினை கர்நாடகா மாநில போக்குவரத்து கழகமே வழங்கும் என கூறியதோடு இந்த சம்பவத்திற்கு கர்நாடக போக்குவரத்து கழகம் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.