குடிபோதையில் சமையல் வேலை செய்பவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் சிவகுருநாதபுரம் விவேகானந்தர் குறுக்குத் தெருவில் வசிப்பவர் சமுத்திரம். இவர் சமையல் வேலை செய்கிறார். கடந்த 11ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், ஊர் பொது கிணற்றில் இன்று சமுத்திரம் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சுரண்டை காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். விசாரணையில் சமுத்திரம் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.