Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஜாலி… பாராசூட்டில் பறக்கும் டிடி… வைரலாகும் வீடியோ…!!!

பிரபல தொகுப்பாளினி டிடி பாராசூட்டில் பறக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் டிடி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கென்று தனி சிறப்பம்சம் உள்ளது. ஏனென்றால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ஸ்வாரசியமாகவும், கலகலப்பாகவும் நடைபெறும். ஆனால் பிரபல தொகுப்பாளினி டிடி முன்பு போல் இல்லாமல் தற்போது சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நயன்தாராவின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கியிருந்தார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் அந்தமானுக்கு சுற்றுலா சென்றுள்ள டிடி அங்கு பேராஷுட்டில் சென்றதை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/CUSDEp3A4lw/

Categories

Tech |