Categories
அரசியல் மாநில செய்திகள்

“டிடிவி நினைக்காதது, இபிஎஸ் யோசிக்காதது”…. சத்தம் இல்லாமல் சாதித்து காட்டிய ஓபிஎஸ்…. ஜெயந்தியில் செம கெத்து…!!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகரில் நேற்று முத்துராமலிங்க தேவருக்கு 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த குருபூஜையின் போது கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்க கவசமானது தேவர் சிலைக்கு அனுபவிக்கப்படும். அதிமுக கட்சியின் பொருளாளர் என்ற முறையில் வங்கியில் இருந்து தங்க கவசத்தை எடுத்து தேவர் சிலைக்கு ஓபிஎஸ் வருடம் தோறும் அணிவித்து வந்தார். ஆனால் நடபாண்டில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனி அணிகளாக மாறியதோடு உட்கட்சி பூசல்களும் அதிகரித்ததால் நீதிமன்றம் டிஆர்ஓவிடம் தங்க கவசத்தை ஒப்படைக்குமாறு கூறியது.

இதனால் தங்க கவசமானது ஆளும் கட்சியான திமுகவின் கைவசம் மாறியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு டிடிவி தினகரன் அதிமுகவை விட்டு பிரிந்து சென்றபோதும் கோர்ட்டில் தங்க கவசத்திற்கு உரிமை கேட்டு மனு தாக்கல் செய்தனர். அப்போதும் பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சியரிடம் தங்க கவசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அப்போது அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருந்ததால் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஓரளவு சமாதானம் அடைந்தனர்.

இந்நிலையில் நேற்று நடந்த தேவர் ஜெயந்தி விழாவின் போது யாருமே எதிர்பார்க்காத விதத்தில் 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசத்தை ஓபிஎஸ் தேவர் சிலைக்கு வழங்கி பசும்பொன் நகரில் கெத்து காட்டு விட்டார். இதனால் இபிஎஸ் பெரும் கலக்கத்தில் இருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பிரச்சனையின் போது டிடிவி தினகரனுக்கு கூட தோன்றாத யோசனை தற்போது ஓபிஎஸ்-க்கு தோன்றியுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் வருகிற தேர்தலில் கூட இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |