பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் (பிஎஸ்எல்) அபுதாபியில் நடைபெற்று வருகின்றது .
பிஎஸ்எல் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் 19 வது லீக் ஆட்டத்தில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் – பெஷாவர் ஜால்மி அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் 7 வது ஓவரில் அடித்த பந்து பவுண்டரியை நோக்கி சென்ற போது ,குவெட்டா அணிக்காக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் டு பிளெசிஸ் பந்தை தடுக்க ஓடிச் சென்றார்.
அப்போது அதே அணியை சேர்ந்த சக வீரர் முகமது ஹஸ்னைன் குறுக்கே வர ,அவரது காலில் டு பிளெசிஸ் தலை மோதியது. இதனால் பலத்த காயமடைந்து மைதானத்தில் சுருண்டு விழுந்த டு பிளெசிஸ்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அணியில் டு பிளசிசுக்கு பதிலாக அயூப் விளையாட உள்ளார்.