மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம், பழனிச்சாமி இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இது குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா தெளிவான விளக்கம் அளித்து விட்டனர்.
அப்படியிருக்கையில், இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்வதாகக் கூறி திமுக நாடகம் ஆடிக் கொண்டிருப்பதோடு, திமுக தலைவர் ஸ்டாலின் அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளையே பரப்பி வருகிறார்.இந்த நிலையில், காந்தியின் நூற்று ஐம்பதாவது பிறந்தநாள் நிகழ்ச்சிக்கான தேசிய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்ற தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, பழனிச்சாமி இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் தமிழக அரசின் இந்த கோரிக்கை மீது பரிசீலனை செய்யப்படும் என்று முதல் அமைச்சரிடம் மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார் என அ.தி.மு.க கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் செய்தி வெளிவந்துள்ளது.