துபாயில் நடைபெற்று வரும் ஜீ டெக்ஸ்ட் தொழில்நுட்ப கண்காட்சியில் நாய் போன்ற வடிவமைப்பு கொண்ட ரோபோ பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
துபாயில் ஜீ டெக்ஸ் என்ற தொழில்நுட்ப கண்காட்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நாய் போன்ற வடிவத்துடன் உருவாக்கப்பட்ட ஸ்பாட் என்ற ரோபோ பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. தனது அசைவுகளால் பார்வையாளர்களை கவரும் இந்த ஸ்பாட் ரோபோவை படத்தில் காணலாம். இது தேவையான இடத்தில் அல்லது குறிப்பிட்ட இடத்தில் சென்று பணியாற்றும் தானியங்கி இயந்திர வடிவமாகும். சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று தேவையான அனைத்து விதமான கண்காணிப்பு மற்றும் கோளாறுகளை இந்த வகை ரோபோக்கள் துல்லியமாக கண்டுபிடிக்கும்.
‘போஸ்டன் டைனமிக்ஸ்’ என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவில் உடற்பகுதி மற்றும் நான்கு கால்கள் உள்ளது. இவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தானாக செயல்படும். அதேபோல் ரிமோட் மூலமாகவும் இதனை இயக்கலாம். இந்த வகை ரோபோக்கள் கரடுமுரடான பகுதியிலும் பயணிக்கும் .குறிப்பாக மாடிப்படியில் ஏறி செல்லும் திறனுடையது. நான்கு கால்கள் கொண்ட விலங்குகளைப் போல் இது செயல்படும்.
இதனால் மணிக்கு மூணு கிலோமீட்டர் வேகத்தில் நடக்க முடியும். 90 நிமிடங்கள் ஓய்வில்லாமல் நடக்கும். இதன் முகப்புப் பகுதியில் மூன்று டிகிரி கோணத்தில் பார்க்க கூடிய கேமரா ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உணரும் கருவிகள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எதிரில் உள்ள பொருள்கள், தடைகளை உணர்ந்து செல்ல பயன்படும். இந்த ரோபோ கீழே தடுக்கி விழுந்தால் தானாக எழுந்து நிற்கிறது. மூடப்பட்ட கதவுகளைத் திறக்கிறது. இந்த ரோபோக்கள் கட்டுமான வேலைகள் நடைபெறும் பகுதியில் பயன்படுத்தலாம்.
பகுதியில் போதுமான தண்ணீர் கசிவு கட்டுமான பகுதியில் போதுமான ரோந்து பணி உள்ளிட்டவைகளுக்கு இதனை பயன்படுத்தலாம். இந்த ரோபோக்களின் மூலம் குறைந்தபட்சம் -20 டிகிரியிலும் அதிகபட்சம் 45 டிகிரி வெப்ப நிலையும் தடைசெய்ய இல்லாமல் செயல்படடும். இந்த ரோபோ கண்காட்சி அரங்கில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த ரோபோ துபாய் மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையத்தில் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.