துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் இருக்கும் பாகிஸ்தானுக்குரிய அரங்கில் உலகில் மிக பிரம்மாண்டமான திருக்குர்ஆன் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
உலகில் சுமார் 1400 வருட வரலாற்றை உடைய புனித நூலான திருக்குர்ஆனை, தங்கம், அலுமினியம் போன்றவற்றால் ஆன எழுத்துக்களுடன் பாகிஸ்தானின் ஷாகித் ரசம் என்னும் கைவினை கலைஞர் பிரம்மாண்டமாக வடிவமைத்திருக்கிறார். வழக்கமாக திருக்குர்ஆன் பாரம்பரிய முறையில் காகிதம், துணி அல்லது தோல் போன்றவற்றால் தான் அமைக்கப்படும்.
ஆனால், சாகித் ரசம், ஐந்து வருடங்களாக கராச்சியில் இதனை வடிவமைத்திருக்கிறார். பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திருக்குர்ஆன் 8½ அடி உயரமும் 6½ அடி அகலமும் இருக்கிறது. இதில் ஒரு பக்கத்தில் 150 வார்த்தைகள் என்று மொத்தமாக 550 பக்கங்கள் இருக்கிறது.
இவற்றில், தங்கம் மற்றும் அலுமினியத் தகடுகளை கொண்டு கலைநயத்துடன் எழுத்துக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த திருக்குர்ஆன் கின்னஸ் சாதனையில் இடம் பெறவிருக்கிறது. தற்போது, உலகிலேயே பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த திருக்குர்ஆன் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பாகிஸ்தானின் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.