துபாயில் நடக்கும் எக்ஸ்போ 2020-ல் இந்திய அரங்கில் அசுரன், சூப்பர் டீலக்ஸ், விஸ்வாசம் உட்பட பல இந்திய திரைப்படங்கள் திரையிடப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியானது கடந்த 1-ந்தேதி அன்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் உள்ள இந்திய அரங்கில் கலை, கலாசாரம், வர்த்தகம் உட்பட பல தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது.
இந்நிலையில், இந்திய பெவிலியனில் ஜல்லிக்கட்டு என்ற மலையாளத் திரைப்படம், ஜெர்ஸி என்ற தெலுங்கு திரைப்படம், சூப்பர் டீலக்ஸ், அசுரன், விசுவாசம் போன்ற தமிழ் திரைப்படங்கள் உட்பட இந்தியாவின் பல திரைப்படங்கள் திரையிடப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த துபாய் எக்ஸ்போவானது வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.