துபாய்க்கு செல்லும் இந்திய பயணிகள் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபு எமிரேட்ஸ் இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்தது. தற்போது இந்தியாவில் கொரோனா குறையத்தொடங்கியுள்ளது. எனவே அரபு நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் கோல்டன் விசா உள்ளவர்கள் மட்டும் சிறப்பு விமானங்களில் துபாய் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரபு எமிரேட்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விமானத்தில் பயணிக்கும் மக்களிடம் குடியிருப்பு விசா இருக்க வேண்டும். மேலும் அரபு எமிரேட்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ள பைசர், அஸ்ட்ரா செனேக்கா, சைனோபார்ம், ஸ்புட்னிக் போன்றவற்றில் ஏதாவது ஒரு தடுப்பூசியும் இரண்டு டோஸ்களும் செலுத்தியிருக்க வேண்டும்.
பயணத்திற்கு சுமார் 48 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்று சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் விமானத்தில் செல்வதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு ஒரு தடவை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு துபாய் சென்றடைந்த பின்பும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் இந்திய மக்கள் கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்த பின்பே தனிமைப்படுத்துதலில் இருந்து வெளியேற முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.