மத்திய தரைக்கடல் நாடுகளில் இந்தியாவை சேர்ந்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றும் துபாய் நகரத்தில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகம். துபாயின் ஜேபிள் அலி பகுதியில் இந்தியர்கள் அதிகமாக வசிப்பதால், சீக்கியர்களுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்போது ஒரு இந்துக் கோயில் கட்டப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது இந்துக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் தீபாவளி கொண்டாட்டத்தின் போது அரேபிய பாணியில் கட்டப்பட்ட இந்த இந்து கோயில் திறக்கப்பட உள்ளது.
1950இல் பனியா சமூக மக்களுக்காகச் சிந்தி குரு தர்பார் கோயில் இப்பகுதியில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலுக்காக 25 ஆயிரம் சதுரஅடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.148 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்தப் பிரம்மாண்ட கோயில் ராஜு ஷெராப் என்ற இந்திய தொழிலதிபர் அளிக்கும் நிதியில் உருவாக உள்ளது. இந்த கோயில் நிர்வாக டிரஸ்ட் உறுப்பினராகவும் இவர் உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த கோயிலின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று விட்டது. இந்த கோயிலில் 11 தெய்வங்களின் சிலை உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.