துபாய் ஆட்சியாளரின் மகளான இளவரசி லதிபா தன் தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
துபாய் ஆட்சியாளரான முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மகள் இளவரசி லதீபா தன் தந்தையால் சித்திரவதைகளை அனுபவிப்பதாகவும் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு உதவி கோரினார். மேலும் கடந்த 2018 ஆம் வருடத்தில் அவர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேற முயன்றார்.
ஆனால் முடியாமல் போனது. அதன் பின்பு அவர் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. எனவே அவரின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டது. தற்போது லதிபாவின் தோழி அவருடன் துபாயில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
அந்த புகைப்படத்தில் லதிபா முகக்கவசத்துடன் இருக்கிறார். மேலும் அவரின் தோழி நாங்கள் ஐரோப்பிய நாடுகளில் விடுமுறையை அனுபவிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் அவர்கள் மாட்ரிட் பராஜாஸ் என்ற விமான நிலையத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டது உறுதியானது.
எனவே இளவரசி லதிபாவிற்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது என்றும் பிற நாடுகளுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளார்கள்.