Categories
உலக செய்திகள்

எக்ஸ்போ 2020 உலகக் கண்காட்சி…. பிரமாண்டமாக நடந்த தொடக்க விழா…. துபாயிலிருந்து நேரடி ஒளிபரப்பு….!!

துபாயில் ஆறு மாதம் நடக்கவுள்ள எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நேற்றிரவு தொடங்க பட்டுள்ளது.

துபாயில் மிக பிரம்மாண்டமாக எக்ஸ்போ 2020 கண்காட்சியானது 6 மாதங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா நேற்றிரவு 7.30 மணியளவில் தொடங்கி 1.30 மணி நேரம் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 1000 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் அமீரகம் மற்றும் இந்தியா உப்பட 192 நாடுகள் பங்கேற்றது.

இதில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் தனித்துவமிக்க அரங்கில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளோடு அரங்கேறியுள்ளது. மேலும் ஒளி மற்றும் ஒலி காட்சிகளுடன் பிரமாண்ட மேடையில் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எக்ஸ்போ 2020 கண்காட்சி முன் “அல் வாசல் பிளாசா” உள்ளது. இதில் கோள வடிவிலான 390 டிகிரியில் ஒளிரும் திரையும் அமைத்துள்ளனர்.  மேலும் இந்த கண்காட்சியை அமீரகம் முழுவதும் 430 இடங்களில் பெரிய திரை மூலம் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியில் இந்தியாவின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அமெரிக்க பாடகி மரியா கரே, அர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர் லையோனல் மெஸ்ஸி உட்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அரபு நாட்டு பெண் இசைக் கலைஞர்களின் பெர்தோஸ் ஆர்கெஸ்ட்ரா ஏ.ஆர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளை virtualexpo.world என்ற இணையதளம் தளத்திலும் எக்ஸ்போ தொலைக்காட்சியிலும் நேரடியாக காண முடியும். குறிப்பாக இந்த விழாவினை காண உலகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பதாக இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

Categories

Tech |